ரேஷன் கடையில் முறைகேடா? புகார் தெரிவிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் முறைகேடா? புகார் தெரிவிக்க அழைப்பு

Added : மே 21, 2020
Share
கரூர்: 'ரேஷன் கடைகளில் முறைகேடு நடந்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என, கரூர் குடிமை பொருள் வழங்கல், குற்ற புலனாய்வு துறை போலீஸ் அலுவலக, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் பொருட்களை குறைவாக வழங்குவது, பதுக்கல்

கரூர்: 'ரேஷன் கடைகளில் முறைகேடு நடந்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என, கரூர் குடிமை பொருள் வழங்கல், குற்ற புலனாய்வு துறை போலீஸ் அலுவலக, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் பொருட்களை குறைவாக வழங்குவது, பதுக்கல் மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள் குறித்து, யாரேனும் தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல்களை, கோவை உட்கோட்ட டி.எஸ்.பி., க்கு, 94981-72888, கரூர் எஸ்.ஐ., க்கு, 94981-65522 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X