பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் மைதானத்தில் நடைபாதை அமைக்கப்படுமா?

Added : மே 21, 2020
Share
Advertisement

கரூர்: 'திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபாதை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர், பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சி சொந்தமான திருவள்ளுவர் மைதானம் உள்ளது. இங்கு, விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சி, சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. இந்த மைதானத்தில், காலை நேரத்தில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். நிகழ்ச்சிகள் நடக்கும் போது மட்டும், மைதானம், 'பளிச்' என காட்சியளிக்கிறது. மற்ற நாட்களில் போதுமான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதுபோல, போட்டிகள் நடக்கும் காலங்கள் தவிர, கூடைப்பந்து மைதானம் கேட்பாரற்று கிடக்கிறது. தினமும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: நகரின் மையப்பகுதியில் இருப்பதால், ஏராளமானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வருகின்றனர். ஆனால், மைதானத்தை சுற்றி ஏராளமான குப்பை கிடக்கிறது. இரவு நேரங்களில், சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்ற குப்பையை வீசுகின்றனர். துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக மைதானத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, நகராட்சி நிர்வாகத்தினர் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X