பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண பொருட்கள் வழங்க பாரதிய மஸ்தூர் சங்கம் மனு

Added : மே 21, 2020
Share
Advertisement

கரூர்: 'உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும்' என, மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் தொழிலாளர்களுக்கு, கடந்த ஒன்பது மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்காக, வட்டார தலைமை இடத்தில் இருந்து மாவட்ட தலைமை இடத்திற்கும், ஊராட்சி ஒன்றிய தலைமை இடத்தில் இருந்து, மாவட்ட தலைமை இடத்திற்கும் அரசு பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X