கரூர்: கரூரில் பல பகுதிகளில், பல நாட்களாக குப்பை அகற்றப்படாததால், மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கரூர் நகராட்சி பகுதியில் உள்ள, 48 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பை, வாங்கல் சாலை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதை தவிர, நகராட்சி பகுதிகளில் பல இடங்களில், குப்பையை கொட்டி பிரித்து, உரமாக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், நகரின் பல இடங்களில், நாள்தோறும் சேகரிக்கும் குப்பையை, பல நாட்களாக கொட்டி வைத்துள்ளனர். மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து எடுக்கப்பட்ட குப்பையை, மூட்டைகளில் கட்டி, நகரின் பல தெருக்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பலமான காற்று வீசும்போது, அவை தெருக்களில் பறந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றமும் வீச துவங்கியுள்ளது. மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், குப்பை அழுகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. நகரில் பல தெருக்களில் தேக்கி வைக்கப்பட்ட குப்பையை, உடனடியாக அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE