பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் 1 லட்சம் கொரோனா மாதிரி சோதனை: ஐ.சி.எம்.ஆர்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
ICMR, One Lakh, Samples, CoronaVirus, corona Test, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona patients, Indian Council of Medical Research, Ministry of Health and Family Welfare, TrueNat, corona screening, corona in India, india fights corona, ஐசிஎம்ஆர், ஒருலட்சம், மாதிரிகள், கொரோனா, வைரஸ், சோதனை, இந்தியா

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (மே 21) வரை மொத்தம் 26 லட்சத்து 15 ஆயிரத்து 920 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக புதிய கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனா தொற்றால் 5,609 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12, 359 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 63,624 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45,300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,435 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா (39,297) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழகம் (13,191) 2வது இடத்திலும், குஜராத் (12,537) 3வது இடத்திலும் , டில்லி (11,088) நான்காவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் உள்ள 10 முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 சதவீதம் நோயாளிகள் உள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில் உள்ள 3 நகரங்கள், குஜராத்தில் உள்ள 2 நகரங்கள், ராஜஸ்தான், மே.வங்கம், மத்தியபிரதேசம், தமிழ்நாடு, புது டில்லியில் தலா ஒரு நகரங்கள் அடங்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X