பொது செய்தி

இந்தியா

ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்: உள்ளூர் விமானப் போக்குவரத்துக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
விமானங்கள்,  வழிமுறைகள், மத்திய அரசு, பயன்பாடு, வெளியீடு, ஆரோக்கியசேது, Lockdown 4.0, AAI, Airports Authority of India, Standard Operating Procedures, SoP, domestic fliers, airlines, domestic flights, airport, aviation ministry, protective gear, face mask, passengers, Aarogya Setu App, Civil Aviation Minister, Hardeep Singh Puri, coronavirus, travel, corona, covid-19, corona spread, travel ban, lockdown relaxation, lockdown extension

புதுடில்லி: மே 25-ம் தேதி முதல் உள்ளூர் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்ற நிலையில், உள்ளூர் விமானப் போக்குவரத்தும் மே 25 முதல் தொடங்கப்படும் என நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.


latest tamil news


அவற்றில் முக்கியமான வழிகாட்டுதல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
* பயணிகள் தங்கள் விமான புறப்பாடுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்தை அடைய வேண்டும்.
* தங்களின் விமானங்கள் புறப்பட நான்கு மணி நேரத்திற்குள் இருந்தால் பயணிகள் முனைய கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
* அனைத்து பயணிகளும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
* வெப்ப பரிசோதனை முடிந்த பின், ஆரோக்கிய சேது செயலி வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
* சில சிறப்பு தேவைகளை தவிர்த்து டிராலிகளுக்கு அனுமதியில்லை.
* கூட்டத்தை தவிர்க்க முனையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் திறக்கப்படும்
* பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்காக பொது போக்குவரத்து மற்றும் டாக்சிகள் இயக்கத்தை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
* விமான நிலையத்திற்குள் இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருக்கும். செய்தித்தாள் மற்றும் வார இதழ்கள் வழங்கப்படாது.
* சென்ட்ரலைஸ்ட் ஏசிக்கு பதில் எங்கு எல்லாம் முடியுமோ அங்கு வெளிப்புற காற்றோட்டத்தை பயன்படுத்தலாம்.
* நுழைவாயில், பரிசோதனை பகுதிகள், முனையத்திற்குள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றக்கூடிய வகையில் அடையாளப் படுத்த வேண்டும்
* விமானம் தரையிறங்கியதும் பயணிகள் குழு, குழுவாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X