சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஊரடங்கால் குறைந்த மாசுபாடு!

Added : மே 21, 2020
Share
Advertisement
கோயம்புத்துாரில் இருந்து பார்த்தால், உடுமலையின் காற்றாலைகள் தெரிகின்றன. பதான்கோட்டில் இருந்து பார்த்தால், இமய மலை தெரிகிறது. பெய்ஜிங்கில் புகை மூட்டம் இல்லாமல் பளிச்சென்று ஆகிவிட்டது. வெனிஸ் நகர நீர் வழிகள் கண்ணாடி போல தெளிவாக ஆகிவிட்டனர்.இப்படி கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பக்க விளைவுகளைப் பற்றி மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.எனவே, 'நேச்சர் கிளைமேட் சேஞ்ச்' இதழில்
ஊரடங்கால் குறைந்த மாசுபாடு!

கோயம்புத்துாரில் இருந்து பார்த்தால், உடுமலையின் காற்றாலைகள் தெரிகின்றன. பதான்கோட்டில் இருந்து பார்த்தால், இமய மலை தெரிகிறது. பெய்ஜிங்கில் புகை மூட்டம் இல்லாமல் பளிச்சென்று ஆகிவிட்டது. வெனிஸ் நகர நீர் வழிகள் கண்ணாடி போல தெளிவாக ஆகிவிட்டனர்.

இப்படி கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பக்க விளைவுகளைப் பற்றி மக்கள் ஆச்சரியமடைகின்றனர்.எனவே, 'நேச்சர் கிளைமேட் சேஞ்ச்' இதழில் ஆராய்ச்சியாளர்கள் இந்த மாற்றங்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர். உலகங்கும், 69 நாடுகளில், அதவது, 97 சதவீத நிலப் பரப்பில் ஊரடங்கு நடவடிக்கைக்குப் பின் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களை வைத்து கணக்கிட்டபோது, தரைப் போக்குவரத்து முடக்கத்தால், உலகில், 43 சதவீத கார்பன் உமிழ்வு குறைந்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளின் முடக்கத்தால் மேலும், 43 சதவீத கார்பன் உமிழ்வு குறைந்துள்ளது.விமானங்கள் ஓடாததால், 3 சதவீத கார்பன் உமிழ்வு காற்றில் கலப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் இறுதி வாக்கில் முழு முடக்கம் நீக்கபட்டால், மீண்டும் காற்றில் கரி கலப்பது தொடரும் என, 'நேச்சர்' இதழ் ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X