சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மருந்து தெளிக்கும் 'ட்ரோன்!'

Added : மே 21, 2020
Share
Advertisement
மருந்து தெளிக்கும் 'ட்ரோன்!'

இன்றும் விளையாட்டு அரங்குகளை திறக்கும் எண்ணம் யாருக்கும் வரவில்லை. ஆனால், அடுத்த சில மாதங்களில், நிச்சயம் கிரிக்கெட், கால்பந்து பிரியர்களை ஈர்க்க, அரங்குகள் திறக்கப்படும். அப்படித் திறக்கப்படும் போது, ஆட்டத்திற்கு முன்னும், பிறகும், கிருமி நாசினிகளை தெளிக்கவேண்டும்.

இதற்கு ஆட்களை வைத்து செய்தால், நேரமும், செலவும் அதிகம் ஆகும் என்பதால், 'ஈகிள் ஹாக்' என்ற அமெரிக்க, 'ட்ரோன்' தயாரிப்பாளர்கள், மருந்து தெளிக்கும் ட்ரோன்களை தயாரித்துள்ளனர்.

எட்டு விசிறிகளைக் கொண்ட ஈகிள் ஹாக் ட்ரோன், இரண்டு நுண் துாவிகள் மூலம், கொரோனாவை ஒழிக்கும் கிருமி நாசினியை சாரல் போல பார்வையாளர் இருக்கைகள் மீது தெளித்துச் செல்லும். ரிமோட் மூலம் இயங்கும் இந்த ட்ரோனை எளிதில், விரைவில் இயக்க முடியும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X