2021ல் ஒலிம்பிக் நடத்த முடியவில்லை எனில் ரத்து செய்யப்படும்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
Olympic, IOC, Chief, Thomas Bach, Cancelled, Tokyo Olympics, IOC chief, Japan, Prime Minister, Shinzo Abe, Japan PM, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona news, corona cases, lockdown, corona crisis, sports, athletes, ஒலிம்பிக், டோக்கியோ, தாமஸ்பேக், ரத்து,

டோக்கியோ: கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டும் நடத்த முடியவில்லை எனில் ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க இருந்தன. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, பல லட்சங்களில் மக்கள் பாதிப்படைந்து வருவதால், ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய நிலைமையில் கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதாலும், கொரோனா பரவலை இதுவரை முற்றிலும் தடுக்க முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இதனால், வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்படவில்லை எனில், 2021ம் ஆண்டிலும் போட்டியை நடத்த முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.


latest tamil news



இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் கூறுகையில், ‛ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாட்டு குழுவில் 3,000 முதல் 5,000 வரையிலான ஆட்களை பணியில் வைத்திருக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் போட்டியை ஒத்திவைக்க திட்டமிடும்போது, அதற்கேற்ப உலகம் முழுவதும் முக்கிய விளையாட்டு போட்டிகளை மாற்றியமைப்பது சாத்தியமில்லை.
2021ம் ஆண்டு ஜூலை 23 அன்று உலகம் எப்படி இருக்கும் என்ற தெளிவு இருந்தால் அதற்கேற்ற பொருத்தமான முடிவுகளை எடுப்போம், அப்போதும் போட்டியை நடத்த முடியவில்லை எனில் ரத்து செய்யப்படும்'. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X