பொது செய்தி

இந்தியா

விமான பயணத்திற்கு கட்டணம்: நிர்ணயம் செய்தது மத்திய அரசு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
Vande Bharat Mission, Centre, Civil Aviation Ministry, Hardeep Singh Puri, Domestic passenger services, airlines, flights,  Indian citizens, COVID-19 crisis, coronavirus, corona, corona outbreak, central government, govt of India, Air India, passengers, domestic flights, lockdown, travel ban,  கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, விமானம், விமானபோக்குவரத்து, வந்தேபாரத், இந்தியர்கள், விமானபோக்குவரத்து, அமைச்சர்,ஹர்திப்சிங்புரி, புரி, வழித்தடம், கட்டணம்,

புதுடில்லி: விமான பயணத்திற்கான குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை மத்திய அரசு வரையறுத்துள்ளது. டில்லி மும்பை போன்ற நகரங்களில், பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்கள் பயணத்திற்கு, கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.3,500ம், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 3 மாதங்கள் அமலில் இருக்கும்.

இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி கூறுகையில், கடந்த 5 ம் தேதி வந்தே பாரத் திட்டம் குறித்து அறிவிக்க நாம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்தோம் தற்போது, நாம் நேரடியாக சந்தித்துள்ளோம். இதன் மூலம், சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதையும், பொருளாதாரத்தை மீண்டும் துவக்குவதற்கான வந்துவிட்டதை பிரதிபலிக்கிறது.

வந்தேபாரத் திட்டம் என்பது, வெளிநாட்டில் இருக்கும் அனைத்து இந்தியர்களை அழைத்து வருவது அல்ல. வெளிநாடுகளில் தவித்தவர்களை அழைத்து வருவதை இலக்காக கொண்டோம். பல்வேறு நாடுகளில் இருந்து 20 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலையிழந்தவர்களை போர் விமானம் மூலம் அழைத்து வந்துள்ளோம். வந்தேபாரத் திட்டம் துவக்கப்பட்ட இரண்டாவது வாரங்களில் அதிகமானோரை அழைத்து வந்துள்ளோம். இனி வரும் காலங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த முயற்சியில், ஏர் இந்தியா தவிர்த்து, தனியார் விமானங்களும் பயன்படுத்தப்படும்.

வரும் 25 முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக துவக்கப்படும். இதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில், விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து சர்வதேச விமான போக்குவரத்து துவக்கப்படும். விமானத்தில் பயணிப்போர், பாதுகாப்பு பாதுகாப்பு உடை, மாஸ்க் அணிந்திருப்பதுடன், சானிடைசர் பாட்டீல் வைத்திருக்க வேண்டும். விமானத்தில் உணவு வழங்கப்படாது. இருக்கையில் குடிநீர் பாட்டீல் வைக்கப்படும். பயணி, கொரோனாவில் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய ஆரோக்கிய சேது செயலி மூலம் உறுதி செய்யப்படும். இந்த செயலியில், ஸ்டேட்டஸ் சிவப்பாக இருந்தால், அவர் பயணிக்க அனுமதி கிடையாது. விமான ஊழியர்கள், முழுபாதுகாப்பு உடை அணிந்திருக்க அறிவுறுத்தப்படும். விமானத்தில் ஒரு பை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்குவதுடன், விமானம் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வர வேண்டும்.


latest tamil newsவிமான கட்டணங்கள் முறைபடுத்தப்படுவதுடன், நிலையான வரம்பில் இருக்கப்படும். இந்த உத்தரவு இன்று முதல் 24 ஆகஸ்ட் நள்ளிரவு வரை அமலில் இருக்கும். விமான பயணத்திற்கான குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை மத்திய அரசு வரையறுத்துள்ளது. டில்லி மும்பை போன்ற நகரங்களில், பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்களாக இருக்கும் நிலையில், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.3,500ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.10 ஆயிரமும் இருக்கும். இது 3 மாதங்கள் அமலில் இருக்கும்.

விமான இயக்க பாதைகள் ஏழு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.தற்போது நாட்டில் உள்ள அனைத்து இயக்க பாதைகளும் மேற்கண்ட 7 க்குள் தான் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X