பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய பணி நியமனத்திற்கு தடை ; அரசு விழா செலவைக் குறைக்கவும் உத்தரவு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
தமிழகஅரசு, செலவுகள், குறைக்க_உத்தரவு, Tamilnadu, Government, expenditure, cost, chenni, Tamil Nadu, TN News, TN govt, coronavirus, corona, covid-19, corona crisis, corona outbreak, corona in TN, India

சென்னை: தமிழகத்தில் புதிய பணி நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விழாக்களில் செலவுகளை குறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு சார்ந்த விழாக்களில் செலவினங்களை குறைக்க அரசு அலுவலகங்களுக்கான மொத்த செலவுகளில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

*சிக்கன நடவடிக்கையாக, அரசு சார்பில் நடக்கும் விழாக்களில் சால்வைகள், பூங்கொத்துகள், நினைவு பரிசுகள் வழங்குவது தவிர்க்க வேண்டும்

*அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களின் செலவினங்கள் குறைக்கப்படுகிறது.

*மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகள் வாங்குவது 50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும்.

*சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை மட்டுமே உபகரணங்கள் கொள்முதல் செய்ய வேண்டும்.

*அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. ரயில் கட்டணத்திற்கு இணையான தொகைக்கு மட்டுமே அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

*அரசு செலவில் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. வெளிமாநில பயணத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.

*கட்டாய பயணங்களை மட்டுமே அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

*விளம்பர செலவுகளை 25 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும்.

*அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செலவின குறைப்புக்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*அலுவலக பயன்பாட்டில் மொத்தம் 20 சதவீத செலவுகள் குறைக்கப்படுகிறது.

*புதிய கம்ப்யூட்டர் மற்றும் பாகங்கள் வாங்க தடை விதிக்கப்படுகிறது. பழைய மற்றும் செயல்படாதவற்றை மட்டும் மாற்றி கொள்ளலாம். இதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

*அரசு அதிகாரிகளின் தினப்படி 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி

*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

*அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.


latest tamil newsஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
21-மே-202021:48:19 IST Report Abuse
Krishna Rulers MUST ABOLISH All WASTEFUL & EXTRAVAGANT EXPENDITURES Incl. FREEBY-BRIBERIES (Only 10% are Poordebilitated-aged etc Others are Earning & with Money), ALL GOVT. POSTS (with VVV FAT PAY-Scales Useless, Anti-People, Power Misusing Esp. Rulers-Officials Incl. Police-Judges), all Upperhouses Etc Etc Etc., With SAVED MONEY, ENSURE 01 JOB PER FAMILY With Only applicable Minm Wages For ALL in All Spheres (Incl. Power Misusing Dictator Rulers-Officials-Injustice Judges as They Encourage It Against Laws), FOOD-MEDICAL-ECONOMIC-SOCIAL (Basic Human Rights) SECURITY. Since People-Rep Rulers Will Not Do so, Every Year Elections Must so that Reps Will Fear & Work for Supreme People
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-மே-202020:57:01 IST Report Abuse
RajanRajan அப்போ டான்சி மணிமண்டபம் கட்டுறது அம்பேல் தானா. ஹும் எதோ நல்லகாரியம் நடந்த சரிதான்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-மே-202019:49:49 IST Report Abuse
RajanRajan உற்பத்தி துறைகளை ஊக்குவிப்பதற்கு கடன் கொடுப்பது பணம் எங்கு வேலையை துவங்குகிறது என்பது தெரியும். உற்பத்தி வேலைவாய்ப்பை உருவாக்கும் அடுத்து அது சார்ந்த சம்பளம் உழைப்பவர்களிடம் சேர்க்கிறது.அதை தொடர்ந்து நுகர்வோரின் வாங்கும் திறன் பட்டியல் துவங்குகிறது. இந்த வகையில் பண சுழற்சி என்பது உழைப்பு சார்ந்ததாக உத்வேகமெடுக்க வைக்கும் ஒரு கோட்பாடு. அடுத்து பணத்தை நேரடியாக மக்களிடம் கொடுக்கும் போது அது கடனா அல்லது உதவி தொகையா எனும் கேள்வி எழுகிறது. கடன் என்றால் வசூல் கேள்வியாகி தள்ளுபடி எனும் அரசியல் சாயத்தை எதிர் கொள்ள வேண்டிவரும். அடுத்து நுகர்வோர் திறன் உற்பத்தி சார்ந்ததாக இல்லாமல் சந்தர்ப்பம் சார்ந்த செலவினங்களாக டாஸ்மாக் போன்று மாறி விடும். எனவே பணம் தன் சுழற்சியை உற்பத்தி, உழைப்பு, சம்பாதிப்பு, செலவு செய்யும் திறன், அடிப்படை தேவை சார்ந்த நுகர்வு, வாழ்க்கை தரம் சார்ந்த வாழ்க்கை செலவின நிர்ணயம் பரிணமிக்கும். மக்கள் சம்பாத்தியம் சேமிப்பு பின்பு செலவினம் என பட்டியலிட்டு வாழ்க்கையை அமைப்பது சுயசார்பு சமுதாய பொருளாதாரத்தை வளர்க்கும். அரசு மானியம் என்பது மக்களின் மீது அரசு நடத்தும் மறைமுக தாக்குதல் என்பதை மக்கள் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் அரசு மக்களிடம் இருந்து தான் வருமானம் பார்த்து மக்களுக்காக செலவு செய்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். அத்துடன் அரசு வருமானம் சீரான வரிவிதிப்பை எதிர் கொள்ளவும் நுகர்வோர் திறன் சார்ந்த உற்பத்தியை பெருக்கும் மார்க்கம் தெளிவு பெறும். இது சமூக தேவை சார்ந்த அடிப்படை பொருளாதார படிக்கற்கள். இதன் படி பார்க்கையில் இப்போதைய மத்திய அரசின் பொருளாதார மீட்பு யுக்தி பயணம் சரியான பாதை என்று தான் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X