எலிகளில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும் பரிசோதனை தடுப்பு மருந்து

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
US Pharma Firm, Inovio Pharmaceuticals Inc, COVID-19, Vaccine, Produces, Antibodies, Mice, Guinea Pigs, Dr. David Weiner, Wistar Institute, covid-19 vaccine, coronavirus, corona, ஆண்டிபாடி, கொரோனா, வைரஸ், தடுப்புமருந்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் இனோவியோ பார்மாசூட்டிகல்ஸ் என்ற மருந்து நிறுவனம் சுண்டெலி மற்றும் கினி எலிகளில் பரிசோதித்த தடுப்பூசி ஒன்று கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது இதற்கென அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இல்லை. இதனால் இந்நோய் மோசமான உயிரிழப்புகளையும், பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உருவாக்க 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஐரோப்பிய யூனியன் 2021 தொடக்கத்தில் தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியிருக்கிறது.


latest tamil news


இந்த நிலையில் அமெரிக்காவின் இனோவியோ நிறுவனம் ஐ.என்.ஓ-4800 எனப்படும் தடுப்பூசியை ஏப்ரல் மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி முதல் கட்ட பரிசோதனையை தொடங்கியது. அந்த சோதனையின் ஆரம்ப முடிவுகள் ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில் ஆரோக்கியமான 40 பங்கேற்பாளர்களுக்கு நான்கு வார இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி வழங்கப்படுகின்றன, பின்னர் இரண்டு வாரங்கள் கண்காணிக்கின்றனர்.


latest tamil news


மனிதர்களுக்கு நடத்திய சோதனையில் பெரியளவு பக்கவிளைவுகள் இல்லை, சிலருக்கு கையில் லேசான சிவத்தல் இருந்தது என்று இனோவியோவின் ஆராய்ச்சி தலைவர் டாக்டர் கேத்ரின் தெரிவித்தார். முதல் கட்ட பரிசோதனையின் தகவல்கள் கிடைத்ததும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் அடுத்த கட்ட சோதனைகளுக்கான அங்கீகாரத்தை எப்டிஏவிடம் இனோவியோ பெறும்.

இனோவியா நிறுவனம் விலங்களில் நடத்திய ஆய்வு முடிவுகள், சமீபத்திய நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகியது. அதில் தடுப்பூசி போடப்பட்ட விலங்குகளின் நுரையீரலில் ஆன்டிபாடிகளைக் கண்டறிந்ததாக ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர். இனோவியோ அடுத்து முயல்கள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட பெரிய விலங்குகளில், கொரோனா வைரஸை செலுத்தி பின்னர் தடுப்பூசியை அளித்து பரிசோதிக்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X