பொது செய்தி

இந்தியா

கொரோனா ஊரடங்கு சைபர் தாக்குதல்: கேரளா முதலிடம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் அதிகளவில் சைபர் தாக்குதல் பதிவான மாநிலங்களில் கேரளா முதலிடம் பெற்றுள்ளதாக இணையப் பாதுகாப்பு நிறுவனமான கே 7 தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றை மையப்படுத்தி தொடர்புடைய மாநிலங்களை குறிவைத்து, பயனர்களின் தகவல்களை திருடுவதை நோக்கமாக கொண்டு தாக்குதல் நடத்தியதாக கே 7 தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. பிப்., முதல் ஏப். 2020
Kerala, Cyber Attacks, Lockdown, cyber crimes, K7 Computing, coronavirus, corona, corona outbreak, corona crisis, covid-19 pandemic, கேரளா, சைபர் தாக்குதல், ஊரடங்கு, கே7

புதுடில்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் அதிகளவில் சைபர் தாக்குதல் பதிவான மாநிலங்களில் கேரளா முதலிடம் பெற்றுள்ளதாக இணையப் பாதுகாப்பு நிறுவனமான கே 7 தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை மையப்படுத்தி தொடர்புடைய மாநிலங்களை குறிவைத்து, பயனர்களின் தகவல்களை திருடுவதை நோக்கமாக கொண்டு தாக்குதல் நடத்தியதாக கே 7 தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. பிப்., முதல் ஏப். 2020 வரை அதிகரித்துள்ள சைபர் தாக்குதல்கள், உலகம் முழுவதும் உள்ள ஹேக்கர்கள், கொரோனா தொற்றை மையப்படுத்தி தனிப்பட்ட மற்றும் கார்ப்பரேட் அளவிலான தகவல்களை சுரண்டுவதற்கு முயற்சித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் கணினி மற்றும் மொபைல் போன் மூலம் பயனர்களின் ரகசிய தகவல், வங்கி விவரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி கணக்குகளை திருடுவதை நோக்கமாக கொண்டுள்ளது.


latest tamil news


இந்த காலகட்டத்தில் காணப்பட்ட முக்கிய அச்சுறுத்தல்கள் ஆன்லைன் மோசடிகள் தான். கொரோனா தகவல் பயன்பாடுகளாக மாறுவேடமிட்டு, பயனர்களின் முக்கிய தரவுகளை குறிவைத்தன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் ஆன்லைன் மோசடி அதிகம் காணப்பட்டன. அதே நேரத்தில் மெட்ரோ நகரங்கள் சிறப்பாக செயல்பட்டன. சிறிய நகரங்களில் 10,000 பயனர்களில், 250 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளன. பெங்களூருவை விட காசியாபாத் மற்றும் லக்னோவைச் சேர்ந்த பயனர்கள் முறையே ஆறு மற்றும் நான்கு மடங்கு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர்.


latest tamil news


கேரளாவில், கோட்டயம், கண்ணூர், கொல்லம், மற்றும் கொச்சி போன்ற பிராந்தியங்கள் முறையே 462, 374, 236, மற்றும் 147 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக கேரளா, 2,000 சைபர் தாக்குதல்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளை கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப்பில் 207 தாக்குதல்களும், தமிழகத்தில் 184 சைபர் தாக்குதல்களும் நடந்துள்ளது. பதிவான சைபர் தாக்குதல்களில் பெரும்பான்மையானவை அதிநவீன பிரச்சாரங்களுடன் ஆன்லைன் மோசடி தாக்குதலாக இருந்தன. அவை மிகவும் படித்த பயனர்களைக் கூட எளிதாகக் கவரும். இந்த தாக்குதல்கள் பயனர்களின் அச்சத்தை உயர்த்துவதையும், நடவடிக்கை எடுக்க அவசர உணர்வை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தன.

மோசடி செய்பவர்கள் அமெரிக்காவின் கருவூலத் துறை, உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பிரதிநிதிகளாக மோசடியை அரங்கேற்றி உள்ளனர். பேரழிவு தரும் ராண்ட்சம் வைரஸ் போன்ற கணினியில் தீங்கிழைக்கும் பொருளை தானாகவே பதிவிறக்கும் இணைப்புகளைப் பார்வையிட பயனர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். மற்ற தாக்குதலாக, கொரோனா சேப்டிமேஸ்க் போன்ற ஆண்ட்ராய்டு செயலிகள் முன்கூட்டியே முகக்கவசம் அளிப்பதாக வாக்குறுதியுடன் பயனர்களை மோசடி செய்துள்ளன. ஜின்ப், அனுபிஸ் மற்றும் செர்பரஸ் போன்ற வங்கி ட்ரோஜான்கள் போன்ற ஆபத்தான தீம்பொருளால் நல்ல செயலிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X