50 நாள் ஊரடங்கு, ஒரு மாதம் தளர்வு: அறிவியலாளர்கள் புது யோசனை

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

லண்டன்: தொடர் ஊரடங்கினால் ஏற்படும் வேலையிழப்பு மற்றும் நிதிச் சிக்கலை தவிர்க்க, 50 நாட்கள் ஊரடங்கு, அதன்பின்னர் 30 நாட்கள் தளர்வு என்னும் நடைமுறையை பின்பற்றலாம் என பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.



latest tamil news


கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காததால், பொது முடக்கம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மூலமாக ஓரளவு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனாலும், முழுவதும் தடுக்க முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதனால் மக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்க ஊரடங்கை அமல்படுத்தி, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஓரளவு தடுக்க முடிந்தாலும், எதிர்வினையாக நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் சிக்கலானது.


latest tamil news


இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை.,யை சேர்ந்த ராஜீவ் சவுத்ரி தலைமையிலான அறிவியலாளர்கள் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி 16 நாடுகளின் தரவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஊரடங்கினை இடைவெளிவிட்டு நடைமுறைப்படுத்தினால், நோய்த் தொற்று சங்கிலியை உடைக்க முடியும் எனத் தெரிவித்தனர். அதாவது, 50 நாட்கள் ஊரடங்கு, அதன்பின்னர் 30 நாட்கள் தளர்வு என்ற ரீதியில் மாறி மாறி நடைமுறைப்படுத்த அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும், இந்த நடைமுறையை 2022ம் ஆண்டு வரை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் இந்த நடைமுறைகள் செயல்படுத்தினாலும், சோதனைகள், தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்தல் உள்ளிட்டவற்றை எப்போதும் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய நடைமுறைகளை பின்பற்றினால் வேலையிழப்பையும், நிதிச் சிக்கலையும் தவிர்க்க முடியும் என ராஜீவ் சவுத்ரி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
21-மே-202019:48:58 IST Report Abuse
Sami Sam அதிகமாக பரவும் தவிர குறைய வாய்ப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X