பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 14 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 94 பேர் பலி

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்,

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 21) மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆகவும், பலி எண்ணிக்கை 94 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று 776 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 13,967 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6282 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



புதிய சவால்

தமிழகத்தில் தற்போது குணமடைந்தவர்கள் விகிதம் 44.97 ஆக உள்ளது. மாநிலத்தில் பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 3.72 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதலில் நெகட்டிவ் ஆகி வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்துள்ளது புதிய சவாலாக உள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பாசிட்டிவாக வருவோரும் சவாலாக உள்ளனர். இந்த புதிய சவால்களால் தான் தற்போதைய அதிக பாதிப்பு எண்ணிக்கைக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
22-மே-202017:46:02 IST Report Abuse
sundarsvpr நாள்தோறும் ஒரே மாதிரியான அறிக்கை ஒரே குரல் மக்கள் வெறுப்பில் உள்ளனர். மக்கள் எப்போது பாதிப்பு குறையும் என்பது பற்றித்தான். பொதுவாய் எல்லோரும் முகக்கவசம் அணிந்துள்ளனர். அப்படியென்றால் தோற்று பரவக்கூடாது, குறையவேண்டும். கையுறை அணியாமல் இருப்பது காரணமாய் இருக்கலாம். எல்லா பொருள்களையும் கொடுப்பது பெறுவது வெறும் கையால் . நடைபெறுவது காரணமாய் இருக்கலாம். முக கவசம் கை உரை சோப்பால் கழுவுகிறோம். ஆனால் காலணியை கழுவதில்லை. இது பற்றி அரசு தகுந்த பிரச்சாரம் செய்யவே ண்டும்.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
22-மே-202015:06:02 IST Report Abuse
kumzi தேசத்துரோகி மூர்க்கன்ஸ் நினைத்தை சாதித்துவிட்டான் மூர்க்கனின் கைக்கூலி சுடலை கானுக்கு ஜோரா கைதட்டுங்க
Rate this:
Cancel
sara -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202005:58:01 IST Report Abuse
sara extend the Lock Down till june 30th.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X