அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., து.பொதுசெயலாளர் வி.பி.துரைசாமி பதவி பறிப்பு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர், முருகனை சந்தித்து பேசியதால், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, வி.பி.துரைசாமியை நீக்கி, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.'முரசொலி' அலுவலக நிலம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில், ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இதனால், முருகன் மீது, தி.மு.க.,வினர் கடும்
தி.மு.க.,  துரைசாமி, நீக்கம், DMK, deputy general secretary post, Duraisamy,   removed, dismissal, Namakkal district, TN News, TN districts, Tamil Nadu, TN, Stalin, BJP, Politics

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர், முருகனை சந்தித்து பேசியதால், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து, வி.பி.துரைசாமியை நீக்கி, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

'முரசொலி' அலுவலக நிலம் தொடர்பாக, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தின் துணை தலைவராக இருந்த முருகன், ஆணையத்தில், ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். இதனால், முருகன் மீது, தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் இருந்தனர்.


latest tamil news
இதனிடையே, தமிழக பா.ஜ., தலைவராக, முருகன் நியமிக்கப்பட்டார். அவரை சமீபத்தில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், பா.ஜ.,வில், துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது.

'டிவி' ஒன்றுக்கு, துரைசாமி அளித்த பேட்டியில், 'ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுகிறார்' என்ற கருத்தை தெரிவித்தார்.

இதையடுத்து, துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் வகித்த பதவியை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கி, கட்சியின் தலைவர் ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், ''பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.,வில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-மே-202012:10:00 IST Report Abuse
skv srinivasankrishnaveni satti suttadhaada கைவிட்டதடா ஆளை விட்டதடா
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-மே-202010:57:47 IST Report Abuse
Natarajan Ramanathan நயன்தாராவை அவமானப்படுத்தி விட்டார் என்று ராதாரவியை கட்சியை விட்டே நீக்கிய தீயமுகவுக்கு ஒட்டுமொத்த தலித் மக்களை அவமானப்படுத்திய தயாநிதியை நீக்க தைரியம் இல்லையே?
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
22-மே-202004:40:02 IST Report Abuse
Siva Kumar INDRU DURAISAMY, NAALAI DURAI MURUGAN, ADUTHU YAARO?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X