கனடாவில் 7500 வென்டிலேட்டர்களை தயாரிக்க ஒன்ராறியோ நிறுவனம் ஒப்பந்தம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement
டொரண்டோ : கனடாவில் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான வென்டிலேட்டர்களை தயாரிக்க ஒன்ராறியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவிலும் கொரோனா நோயின் தாக்கம் தீவிரமடைந்து (குறிப்பாக நர்சிங்ஹோம் மருத்துவமனைகளில்) வருவதாக பிரதமர் ட்ரூடோவும் முன்பு

டொரண்டோ : கனடாவில் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான வென்டிலேட்டர்களை தயாரிக்க ஒன்ராறியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவிலும் கொரோனா நோயின் தாக்கம் தீவிரமடைந்து (குறிப்பாக நர்சிங்ஹோம் மருத்துவமனைகளில்) வருவதாக பிரதமர் ட்ரூடோவும் முன்பு அறிவித்திருந்தார். நாட்டில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மேல் (சுவாச கோளாறு உள்ளிட்ட) பல நோயாளிகள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லை. இதனால் கனடா உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்கின. அதில் பல கருவிகள் பழுதாகவும், போதிய பாதுகாப்பின்மையுடனும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து, பல நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் மூலம் மாஸ்க், சானிட்டைசர் உட்பட பல சுகாதார உபகரணங்களை தயாரிக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் டொரண்டோவை தளமாக கொண்ட செலஸ்டிகா என்னும் (உலகளாவிய) நிறுவனம் சுகாதாரப் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான உபகரணங்களைத் தயாரிக்கிறது. கனடாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில், ஒன்ராறியோவின் நியூ மார்க்கெட்டில் 7500 வென்டிலேட்டர்களை தயாரித்து கொடுக்க செலஸ்டிகா நிறுவனம், ஸ்டார்பிஷ் உடன் ஒப்பந்தம் செய்தது.


latest tamil news



நாட்டின் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருத்துவ வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் மத்திய அரசின் திட்டத்தில் பணிபுரியும் பல நிறுவனங்களில் ஸ்டார்ஃபிஷ் ஒன்றாகும். ஸ்டார்ஃபிஷ் நிறுவனத்துடனான அதன் ஒப்பந்தத்தின் நிதி விதிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ சாதனங்களை கனடாவின் சுகாதாரதுறைக்கு வழங்க உத்தேசித்துள்ளதாக செலஸ்டிகா கூறுகிறது. மார்ச் முதல் கொரோனா பரவ துவங்கியதில் இருந்து கனேடிய மருத்துவ மனைகளில் 5,000 வென்டிலேட்டர்கள் இருந்தன. நோயின் தாக்கத்தை குறைக்க பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X