அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தல்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
US, Al Qaeda terrorist, Mohammed Ibrahim Zubair, India, America, terrorist

புதுடில்லி: அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் ஜூபைர், 41, அமெரிக்காவில் இல்லினியோஸ் பல்கலை.யில் பொறியியல் படித்துள்ளார். 2006-ம் அமெரிக்காவின் ஒஹிகோ மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டதன் மூலம் அந்நாட்டு நிரந்தர குடிமகன் உரிமை பெற்றார்.

இந்நிலையில் அரேபிய நாடுகளில் செயல்பட்டு வரும் அல்கொய்தா பிரிவு முக்கிய தலைவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியாக இவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.


latest tamil news



இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு முகமது இப்ராஹிம் ஜூபைர் நாடு கடத்தப்பட்டார். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
25-மே-202017:48:34 IST Report Abuse
Tamilnesan இறுதியில் இவர் மறைந்தவுடன், அரசு மரியாதையோடு உடல் அடக்கம் செய்யப்படும். இவர் புகழை பள்ளி பாடப்புத்தகங்களில் தொடர்ந்து பாடப்படும். முக்கிய விஷயமொன்றை சொல்ல மறந்து விட்டேன். நடுவே, இவரை பற்றி தமிழில் ஒரு சினிமா தயாரிப்பார்கள். அது வெற்றிகரமாக ஓடும் என்று சொல்ல தேவையில்லை.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
25-மே-202017:44:40 IST Report Abuse
Tamilnesan தலைவலி ஆரம்பம். இவர் கேட்காமலேயே ஜாமீன் கொடுக்கப்பட்டு, ஆள் கடத்தலில் ஈடுபடுவார், பிறகு சில தீவிரவாதிகளை விட்டால் தான், பணய ஆட்கள் விடுவிக்கப்ப டுவார்கள் என்று கூறுவார். அப்புறமென்ன, விவாத மேடைகளில் இவர் புகழ் பாடப்படும், இறுதியில் இவர் ராஜ பரம்பரையை சேர்ந்தவர் என்று சான்றிதழ் கொடுப்பார்கள். இறுதியில் இவர் ஒரு கட்சியில் இனைந்து அமைச்சராகி கோடிகளில் புரள்வார்.....இது தான் இந்திய ஜனநாயகம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மே-202005:16:58 IST Report Abuse
Mani . V அதுதான் இந்தியா கொண்டு வந்தாச்சே அப்புறம் என்ன? விடுதலை..... விடுதலை.....விடுதலை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X