சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 21, 2020
Share
Advertisement

தண்ணீர் தான் நல்லது

கோடைகாலத்தில் தாகத்தைச் சமாளிக்கும் ஆற்றல் தண்ணீருக்கு மட்டுமே உள்ளது. எந்த ஒரு உணவுப்பொருளும் உடலுக்குள் சென்றால், உடலின் வெப்ப
நிலையை அடைய வேண்டும். குளிர்ந்த மென்பானத்தை அருந்தினால் அது உடலின் வெப்பநிலையை அடைய, கலோரிகளை உடலில் இருந்து தான் எடுக்கிறது.
மென்பானங்களில் பழத்தின் சுவை, மணம் மற்றும் நிறம் இருக்கும். ஆனால் பழத்தின் சத்துக்கள் எதுவுமே இருப்பதில்லை. செயற்கை மணம், செயற்கை நிறம், சீனி, தண்ணீர், புளிப்பு ஆகியன சேர்த்து தான் தயாரிக்கப்படுகின்றன. எனவே தண்ணீரே நல்லது.

தகவல் சுரங்கம்


மயிலின் சிறப்பு



மயிலை சிறப்பிக்கும் வகையில் தமிழகத்தின் ஊர்ப்பெயர்கள் பல உள்ளன. ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுவதற்கேற்ற இடங்கள் 'துறை' எனப்படும். இதனால் தான் மயிலாடுதுறை என ஊர்ப்பெயர் வந்தது. 'இல்' என்பது பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிப்பது. இச்சொல் சில பழமையான
ஊர்களில் சேர்ந்துள்ளது. மயிலை போற்றும் வகையில் 'மைலாப்பில்' என்று இருந்த ஊர் தான், பின் 'மைலாப்பூர்' என மருவியது. உண்பதற்குரிய நீர் நிறைந்த இடம் 'ஊருணி' எனப்பட்டது. ஊருணியைச் சார்ந்த ஊர்களின் பெயரிலும் 'ஊருணி' இடம் பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X