பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடு பகுதியில் தேர்வு மையம் இல்லை:தமிழக அரசு விளக்கம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை: கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையங்களுக்கு பதிலாக வேறு இடத்தில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஐகோர்ட்டில் அளித்துள்ள பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.



latest tamil news




மாநிலத்தில் 10 ம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி முதல் நடத்த உள்ளது இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அளித்துதமிழக அரசு பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது அதில் கூறி இருப்பதாவது:


latest tamil news



மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்கள் வெளியே சென்று வர ஹால் டிக்கெட் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் சிறப்பு தேர்வுமையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46.37 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்படும். சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும். இ பாஸ் இல்லாமல் தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு சென்றுவர வர அனுமதிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தேர்வு அறையில் 10 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் இவ்வாறு அரசின் பதில் மனுவில் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X