பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவில் மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கிய சிஜிஐ நிறுவனம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சிஜிஐ நிறுவனம் மற்றும் பாலா விகாசா அமைப்பும் இணைந்து சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தரிடம் வழங்கினர்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் நோய் தொற்று பாதிக்கப்படுபவர்களின் விகிதம் குறையும் என நம்பப்படுகிறது. மாநில அரசிற்கும் மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்களின் நலனுக்காக பல தன்னார்வலர்களும் சில மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த சிஜிஐ நிறுவனம், வாரங்கலை சேர்ந்த சமூக மேம்பாட்டு அமைப்பான பாலா விகாசாவுடன் இணைந்து கொரோனா தொற்று போரில் சுகாதார பணியாளர்களுக்கு உதவ, சிறுநீரக மாற்று சிகிச்சை (சிஆர்ஆர்டி), வீடியோ லாரிங்கோஸ் கோப்புகள் மற்றும் பிளாஸ்மா சேமிப்பிற்காக -80 டிகிரி டீப் ஃப்ரீசர் போன்ற முக்கியமான உபகரணங்களை காந்தி மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.


latest tamil news



மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கியதற்கு மாநில சுகாதாரதுறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தெலுங்கானாவில் சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பல மருத்துவ உபகரணங்களை இதற்கு முன் ஐதராபாத் ரேஸ் கிளப் அமைப்பினரும் காந்தி மருத்துவமனைக்கு வழங்கினர்.


latest tamil news



அதை தொடர்ந்து, சித்திப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள 100 சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு மருத்துவ உபகணரங்கள் ( பிபிஇ) நிதியமைச்சர் ஹரிஷ் ராவ் வழங்கினார். தொடர்ந்து கார்ப்பொரேட் மருத்துவமனையான ருஷ் மருத்துவமனையின் எம்.டி டாக்டர் நவீன் 100 பிபிஇ கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X