க்ரீனாக்ரே நகரின் ஹிஜாப் கடையில் கார் விபத்து : 10 பேர் காயம்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1) | |
Advertisement
சிட்னி : ஆஸ்திரேலியாவின் க்ரீனாக்ரே நகரத்தில் உள்ள ஹிஜாப் கடையில் ( ஜவுளி நிறுவனம்) கார் புகுந்து விபத்திற்குள்ளானது. இதில் 10 பேர் வரை காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள க்ரீனாக்ரே நகரில் பிரலமான ஹிஜாப் ஹவுஸ் என்னும் கடை உள்ளது. அந்த பகுதியில் சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென வேகமாக கடைக்குள் புகுந்தது.

சிட்னி : ஆஸ்திரேலியாவின் க்ரீனாக்ரே நகரத்தில் உள்ள ஹிஜாப் கடையில் ( ஜவுளி நிறுவனம்) கார் புகுந்து விபத்திற்குள்ளானது. இதில் 10 பேர் வரை காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news



ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள க்ரீனாக்ரே நகரில் பிரலமான ஹிஜாப் ஹவுஸ் என்னும் கடை உள்ளது. அந்த பகுதியில் சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென வேகமாக கடைக்குள் புகுந்தது. கார் புகுந்த விபத்தில் கடையில் இருந்த பல பெண்கள் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்தனர். கடையில் காயமடைந்தவர்கள் பெரும்பாலும் 18முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் என்று நியூ சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



அதை தொடர்ந்து போலீசார் கூறுகையில், சவுத் வேல்ஸின் க்ரீனாக்ரே நகரில் ஹிஜாப்பில் கார் புகுந்ததில் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஒருவர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். யாரும் பலியாகவில்லை. விபத்து பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்பதற்கான ஆரம்ப அறிகுறி எதுவும் இல்லை. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



விபத்திற்கான நோக்கம் ஏதும் உள்ளதா என தெரியவில்லை. விபத்துக்கான காரணம் தெளிவாக இல்லை. விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக அனைத்து வழிகளிலும் ஆராய்ந்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர். இ்நத விபத்து காரணமாக அ்நத பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-மே-202021:41:41 IST Report Abuse
Natarajan Ramanathan ஹிஜாப் = ஜிகாத்.....அவ்வளவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X