புதுடில்லி: டிசம்பர் 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று சில நாடுகளில் கட்டுக்குள் உள்ளது. 188 நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையான சூழலை சந்த்தித்துவரும் நிலையில் சில நாடுகளில் கொரோனா தொற்று அறவே இல்லை. உலகம் முழுவதும் 5 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்து 28 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கிரிபாட்டி
மார்ஷன் தீவுகள்
மைக்ரோனேசியா
நாரு
வட கொரியா
பலூ
சமோ
சாலமன் தீவுகள்
டோங்கா
டர்க்மெனிஸ்தான்
டுவாலு
வனுவாடு

ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பின்றி மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நெதர்லாந்து, இந்தோனேசிய தீவுகள், ஆஸி., பகுதிகளில் கொரோனா தொற்று மிகக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் மேற்கண்ட நாடுகள் கொரோனா பரவத் தொடங்கிய 2019ம் ஆண்டு டிச., மாதமே விழித்துக்கொண்டதுதான். மேலும் சமூக விலகலை பொதுமக்கள் மதித்து நடந்துகொண்டதால் கொரோனா பாதிப்பு முற்றிலும் விலகியது குறிப்பிடத்தக்கது. நாமும் நம் பிரதமரின் அறிவுரையைப் பின்பற்றி நடந்துகொண்டால் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE