இன்று மேற்குவங்கம், ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி| PM Modi to visit West Bengal, Odisha tomorrow | Dinamalar

இன்று மேற்குவங்கம், ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

Updated : மே 22, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி.வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் மேற்கு வங்கத்தில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான
 PM, Narendra Modi, West Bengal, Odisha, Prime Minister, PM Modi, Cyclone Amphan, aerial surveys, PMO, severe cyclonic storm, Odisha Chief Secretary, AK Tripathy, பிரதமர், மோடி, மேற்கு வங்கம், ஒடிசா

புதுடில்லி: அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி.

வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் மேற்கு வங்கத்தில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன.


latest tamil news
வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன. இந்த புயலில் சிக்கி இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X