பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதி சான்றிதழுக்கு 26க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : சென்னையில் வசிக்கும், ஈழுவா, தியா சமுதாயத்தினர், பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் கோருவதற்கான, ஆவணங்களை, வரும், 26க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈழுவா, தியா சமுதாய மக்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்க கோரும் முறையீடுகளை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க கோரி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமை செயலரை, தலைவராக நியமித்து, குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் வசிப்போர், இதுதொடர்பான, முறையீடுகள் மற்றும் ஆவணங்களை, வரும், 26க்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.அதேபோல், குழு உறுப்பினர் செயலர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர், எழிலகம் கட்டடம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கும், எழுத்து பூர்வமாக தபாலில் அனுப்பலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X