நல்ல மனிதர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நல்ல மனிதர்!

Added : மே 21, 2020
Share
 நல்ல மனிதர்!

நல்ல மனிதர்!

'பரவாயில்லையே... விஷயம் தெரிந்தவராகத் தான் இருக்கிறார். இவரை அவசரப்பட்டு விமர்சித்தது தப்பு தான்' என, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவை விமர்சித்ததற்காக கன்னத்தில் போட்டு கொள்கின்றனர், அந்த மாநில மக்கள்.கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முறையான அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து வெளிவருவதற்கு முன்பே, தெலுங்கானாவில் ஊரடங்கை அமல் படுத்தினார். விதிமுறைகளையும் கடுமையாக பின்பற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 'ஊரடங்கு விதிமுறைகளை மீறி, தேவையில்லாமல் ஊர் சுற்றுவோரை சிறையில் அடையுங்கள்' என, கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து, போலீசாருக்கு அதிக அதிகாரமும் கொடுத்தார்.'ஜனநாயக நாட்டில், சர்வாதிகாரி போல் உத்தரவு போடுகிறாரே' என, தெலுங்கானா மக்கள் கரித்துக் கொட்டினார். அதற்கு பின் ஒவ்வொரு முறையும், ஊரடங்கை அவர் நீட்டித்தபோதும், இதேபோன்ற முணு முணுப்பு எழுந்தது. அந்த கடுமையான நடவடிக்கைகளுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தெலுங்கானாவில் மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து, ஐதராபாதின் சில பகுதிகளை தவிர, மற்ற இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இதையடுத்து, 'கோபக்காரராக இருந்தாலும், நல்ல மனிதராகத் தான் இருக்கிறார்' என, பாராட்டுகின்றனர், தெலுங்கானா மக்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X