பொது செய்தி

தமிழ்நாடு

சிட்லபாக்கம் பேரூராட்சியில் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Added : மே 21, 2020
Share
Advertisement

சிட்லபாக்கம் பேரூராட்சி அதிகாரிகள், மூன்று பேர், முறைகேடில் ஈடுபட்டதாக, கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சியில், 2019, செப்., முதல், கணேசன் என்பவர், செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர், பொறுப்பேற்ற பின், பேரூராட்சி பகுதியில், குப்பை அகற்றும் ஒப்பந்தத்தை, அங்குள்ள, பொறுப்பு மேற்பார்வையாளர், நரசிம்மன் என்பவரின் மகள் பெயரில் உள்ள, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு வழங்கி, இருவரும் சேர்ந்து, கொள்ளை லாபம் பார்த்ததாக தெரிகிறது.

மேலும், சுகாதார பணிகளுக்கான உபகரணங்கள் வாங்குவது முதல், குளோரின் பவுடர், சுண்ணாம்பு பவுடர் கொள்முதலிலும், முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. தொடர்ந்து, இயக்குனரகத்தில் பணிபுரியும், ஆய்வு அலுவலர், ஜோ விமல் என்பவர், 10 நாட்களுக்கும் மேல், பேரூராட்சி அலுவலகத்தில், கணக்குகளை பார்த்து, விசாரித்து வந்தார். இதில், முறைகேடுகள் நடந்தது உறுதியானது.

இதை மறைக்க, ஆய்வு அலுவலருக்கும், பெரிய அளவில் தொகை கைமாறப்பட்டதாக, தகவல்கள் கசிந்தன.இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றன.தொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம், சிட்லபாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன், பொறுப்பு மேற்பார்வையாளர், நரசிம்மன், இளநிலை உதவியாளர், ரவிச்சந்திரன் ஆகியோர், கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாடம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கூடுதல் பொறுப்பாக, சிட்லபாக்கம் பேரூராட்சியை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X