சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'சரக்கு' பறிமுதலில் மப்பேடு போலீசாரின் தப்பாட்டம்!

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'சரக்கு' பறிமுதலில் மப்பேடு போலீசாரின் தப்பாட்டம்!

'சரக்கு' பறிமுதலில் மப்பேடு போலீசாரின் தப்பாட்டம்!

தன் வீட்டு முற்றத்தில் கூடிய நண்பர்களுக்கு, கப சுர குடிநீர் வழங்கியபடியே, ''அடுத்த கட்சி விவகாரத்துல, மூக்கை நுழைச்சு வாங்கி கட்டிக்கிட்டாரு பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கொரோனா நிவாரணம் சம்பந்தமா, தி.மு.க., நிர்வாகிகளுடன், வீடியோ கால்ல, ஸ்டாலின் பேசிட்டு இருக்காரே... சமீபத்துல, திருச்சி, மணிகண்டம் ஒன்றியச் செயலர் கருப்பையாவிடம் பேசியிருக்காரு பா...
''அப்ப, கருப்பையா, 'ஸ்ரீரங்கம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான வளர்மதி, அடுத்த தேர்தலில் நிற்கப் போறதில்லைன்னு சொல்லி, ரெண்டு கிராமங்களுக்கு மட்டும் தான் நிவாரணம் குடுத்திருக்காங்க... ஆனா, நம்ம கட்சி சார்புல, நிறைய கிராமங்கள்ல நிவாரண உதவி குடுத்திருக்கோம்'னு சொல்லியிருக்காரு பா...
''இதைக் கேள்விப்பட்ட வளர்மதியின் கணவர், கருப்பையாவுக்கு போன் போட்டு, 'நாங்க தேர்தல்ல நிற்க மாட்டோம்னு, நீங்க எப்படி சொல்லலாம்'னு எகிற, 'நீங்க சொன்னதை நிரூபிக்க தயார்'னு, கருப்பையா போனை கட் பண்ணிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''தலைமை அதிகாரி மீதே புகார் பண்ணிட்டதால, மத்தவங்க அதிருப்தியில இருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''தலைமைச் செயலர் சண்முகம் மேல, தி.மு.க., தரப்பு புகார் சொன்ன விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்வாய்.
''ஆமா... தி.மு.க.,- - எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி உள்ளிட்டவங்க, கொரோனா நிவாரணம் சம்பந்தமா, சண்முகத்தை சந்திச்சப்ப, தங்களை அவர் மதிக்கலைன்னு காரசாரமா புகார் சொன்னாங்கல்லா வே...
''பொதுவா, அதிகாரிகளுக்கு, கட்சி சார்பு இருந்தாலும், அரசு பணியில வெளிப்படையா காட்டிக்க மாட்டாவ... ''இந்தச் சூழல்ல, தலைமை செயலர் மேலயே, தி.மு.க., தரப்பு புகார் சொல்லிட்டதால, நாளைக்கு நம்ம கதி என்னன்னு, கீழ்மட்ட அதிகாரிகள் கவலைப்படுதாவ... தங்களது அதிருப்தியை, தி.மு.க., தலைமைக்கும் தெரியப்படுத்தி இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''போலீஸ்காரா காட்டுல மழை கொட்டறது போங்கோ...'' என, கடைசி மேட்டருக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''கொரோனா தொற்று அதிகம் பரவியிருக்கறதால, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள்ல, டாஸ்மாக் கடைகளை திறக்கலை
யோல்லியா...''இதனால, திருவள்ளூர் மாவட்ட எல்லையில இருக்கற மது பிரியர்கள், வாகனங்கள்ல, வேலுார் மாவட்டம், தக்கோலம் மது கடைகளுக்கு போய், சரக்கு பாட்டில்களை வாங்கிண்டு வரா ஓய்...
''இப்படி வரவாளை, மப்பேடு போலீசார் பிடிச்சு, சோதிக்கறா... அவாளிடம் இருக்கற சரக்கு பாட்டில்கள், பணத்தை எல்லாம் பறிச்சுண்டு, விரட்டி அடிச்சுடறா ஓய்...
''சரக்கு பாட்டில்களை தங்களுக்கு வேண்டியவாளுக்கு வித்து, காசு பார்த்துடறா... இப்படி, கடந்த மூணு நாள்ல மட்டும், 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை பறிமுதல் பண்ணியிருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
ஒலித்த போனை எடுத்த அந்தோணிசாமி, ''கண்ணையா சொல்லுங்க... பார்த்திபன், முனிரத்தினம்கிட்ட பேசிட்டீங்களா...'' என்றபடியே வெளியேற, மற்றவர்களும்
நடையைக் கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R J U N - sennai ,இந்தியா
22-மே-202012:07:09 IST Report Abuse
A R J U N ..பணத்தை எல்லாம் பறிச்சுண்டு, விரட்டி அடிச்சுடறா ஆட்சியர் பார்த்துக்கொண்டு இருக்காரே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X