பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

மே 22, 1926

ராமநாதபுரம் மாவட்டம், தேவகோட்டையில், 1926 மே, 22ம் தேதி பிறந்தவர், ராமநாதன். இவருக்கு, 'தமிழ்வாணன்' என, திரு.வி.க., பெயர்சூட்டினார். திருச்சியில் செயல்பட்டு வந்த, 'கிராம ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
பின், சென்னைக்கு வந்து, 'அணில்' என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது எழுத்து, குழந்தைகளுக்கு மகிழ்வூட்டியது. 'அணில் அண்ணா' என்றழைக்கப்பட்டார். 'வானதி' திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நுால்களை வெளியிட, 'ஜில் ஜில் பதிப்பகம்' தொடங்கினார்.'கல்கண்டு' வார இதழின் ஆசிரியராக, 30 ஆண்டு காலம் பணியாற்றினார். இவரது, கேள்வி - பதில் பகுதிக்கும், துப்பறியும், 'சங்கர்லால்' கதாபாத்திரத்திற்கும், பெரும் வாசகர் வட்டம் உண்டு. 'மணிமேகலை' பிரசுரத்தைத் தொடங்கினார்.
500-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதிக் குவித்துள்ளார். 'தமிழ்ப் பற்பொடி' விற்பனை; 'டப்பிங்' படங்கள் வெளியீடு; பட தயாரிப்பு என, பிற துறைகளிலும், கால் நனைத்தார். 1977 நவ., 10ம் தேதி காலமானார்.
எழுத்தாளர் தமிழ்வாணன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
22-மே-202020:41:47 IST Report Abuse
IYER AMBI அவரது புத்தகங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடாவிட்டால் (விளம்பரத்துடன்) கொஞ்சநாளிலேயே தமிழ்வாணன் யார் என்று கேட்கும் நிலை வரும். டாஸ்மாக் தமிழர்களுக்கு புத்தகம் வாங்கி படிக்கும் மனநலம் பெருகும் என்று தோணவில்லை. உலகெங்கும் இருக்கும் தமிழர்களும் மறந்துவிடுவார். சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும் படிக்கும் தமிழர்களை கைவிரல்களில் எண்ணி விடலாம். கதாசிரியரும் படைப்புகளும் அழிந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X