இதே நாளில் அன்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
 இதே நாளில் அன்று

மே 22, 1926

ராமநாதபுரம் மாவட்டம், தேவகோட்டையில், 1926 மே, 22ம் தேதி பிறந்தவர், ராமநாதன். இவருக்கு, 'தமிழ்வாணன்' என, திரு.வி.க., பெயர்சூட்டினார். திருச்சியில் செயல்பட்டு வந்த, 'கிராம ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
பின், சென்னைக்கு வந்து, 'அணில்' என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது எழுத்து, குழந்தைகளுக்கு மகிழ்வூட்டியது. 'அணில் அண்ணா' என்றழைக்கப்பட்டார். 'வானதி' திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நுால்களை வெளியிட, 'ஜில் ஜில் பதிப்பகம்' தொடங்கினார்.'கல்கண்டு' வார இதழின் ஆசிரியராக, 30 ஆண்டு காலம் பணியாற்றினார். இவரது, கேள்வி - பதில் பகுதிக்கும், துப்பறியும், 'சங்கர்லால்' கதாபாத்திரத்திற்கும், பெரும் வாசகர் வட்டம் உண்டு. 'மணிமேகலை' பிரசுரத்தைத் தொடங்கினார்.
500-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதிக் குவித்துள்ளார். 'தமிழ்ப் பற்பொடி' விற்பனை; 'டப்பிங்' படங்கள் வெளியீடு; பட தயாரிப்பு என, பிற துறைகளிலும், கால் நனைத்தார். 1977 நவ., 10ம் தேதி காலமானார்.
எழுத்தாளர் தமிழ்வாணன் பிறந்த தினம் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X