மாணவர் குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியைகள் உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியைகள் உதவி

Added : மே 21, 2020
Share

செங்குன்றம்: அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு, ஆசிரியைகள் நலத்திட்ட உதவி வழங்கினர்.

சென்னை, செங்குன்றத்தில், புழல் ஊராட்சி ஒன்றிய தெற்கு துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு, 100 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.அவர்களுக்கு உதவும் வகையில், பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி, ஆசிரியைகள் சாந்தி, அம்சா ஆகியோரும், தன்னார்வ குழுவினரும் இணைந்து, அரிசி, மளிகை, காய்கறி பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.அதில், புழல் வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் ஆகியோர், மாணவர்களின் பெற்றோரிடம், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X