அரசியல் செய்தி

தமிழ்நாடு

பத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்றுங்க: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : மே 23, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை :'கொரோனா நெருக்கடியில் இருந்து, அச்சு ஊடகங்கள் மீள, அவர்களின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதம்:இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில், துல்லியமான தகவல்கள் சரியான நேரத்தில், மக்களை சென்றடைய, பத்திரிகைகளின் பங்களிப்பு அவசியமானது. இரண்டு மாதங்களாக, நடைமுறையில் உள்ள
  பத்திரிகை துறை கோரிக்கைகளை நிறைவேற்றுங்க: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை :'கொரோனா நெருக்கடியில் இருந்து, அச்சு ஊடகங்கள் மீள, அவர்களின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:

இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில், துல்லியமான தகவல்கள் சரியான நேரத்தில், மக்களை சென்றடைய, பத்திரிகைகளின் பங்களிப்பு அவசியமானது. இரண்டு மாதங்களாக, நடைமுறையில் உள்ள ஊரடங்கால், விளம்பர வருவாய் இன்றி, அச்சு ஊடகங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணிபுரியும், 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது, என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அச்சு ஊடகங்களின் இப்பிரச்னையை, அரசு கவனிக்காவிட்டால், அவற்றின் நிலைமை இன்னும் மோசமடையும் சூழல் ஏற்படும்.
பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் என்னை சந்திக்கும் போது, அச்சு ஊடகங்கள் சந்திக்கும், பல்வேறு சிக்கல்களை எடுத்துக் கூறினர். அவற்றில் இருந்து மீள, இறக்குதியாகும் அச்சு காகிதம், இதர மூலப் பொருட்களுக்கான சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் நிலுவையில் வைத்துள்ள, விளம்பர கட்டணத்தை உடனே வழங்க வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்.

அரசு ஊடகங்கள், தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற, அவர்களின் இந்த கோரிக்கைகளை, தாங்கள் உடனே நிறைவேற்ற வேண்டும்.இந்த கடினமான நேரத்தில், அச்சு ஊடகத்தினருக்கு, சரியான நேரத்தில், தாங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.இவ்வாறு, கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
23-மே-202010:46:23 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மூன்று பேரை பத்திரிக்கை ஆஃபிஸில் கொளுத்திய உடன்பிறப்புகளை மதுரையில் பதவிகள் கொடுத்து அழகு பார்த்து கொண்டுள்ளனர், ரவுடிகள் என்ற திறமை இருந்தால்தான் இந்த தீ மூ க வில் சேர முடியும் இந்த மேதாவியை பார்த்ததின் நோக்கமே புரியவில்லை
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
22-மே-202023:33:48 IST Report Abuse
unmaitamil கொரோனா உள்ளிருப்பு நேரத்தில், இந்த வெட்டி பயலுக எப்படி எல்லாம் நேரத்தை தமாஷாக செலவழிக்கிறார்கள் என்பது இப்போது புரிந்துவிட்டது. நன்றி சுடலை
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
22-மே-202019:34:12 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஒருவேளை சுடலையாறு கல்யாண "பத்திர்க்கை" என புரிந்து கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பாரு.. இவர் தான் பூனை மேல் மதில் ஆச்சே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X