வட மாநில தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
 வட மாநில தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

திருவொற்றியூர்: சொந்த ஊர் திரும்ப முடியாத விரக்தியில், வட மாநில தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர். விமானம், ரயில் மற்றும் பேருந்து என, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.இதனால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், பலரும் தவித்து வருகின்றனர். சமீபத்தில், ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டு, சிறப்பு ரயில்கள் மூலம், வட மாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பி வருகின்றனர்.

திருவொற்றியூரில் தங்கி கூலி வேலை பார்த்த, பீஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, 21 பேர், சொந்த ஊர் திரும்ப முன்பதிவு செய்தும், சரியான தகவல் இல்லாததால், ஊர் திரும்ப முடியவில்லை.சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றாலும், போலீசார் விரட்டி அடிக்கின்றனர் என, திருவொற்றியூர் வீதிகளில் தங்கியிருந்தனர். அவர்களை மீட்ட, சமூக ஆர்வலர் தொண்டன் சுப்ரமணி என்பவர், தங்க இடமளித்து, உணவு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், ஊர் திரும்ப முடியாத விரக்தியில், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, தேரடியில், நேற்று காலை, அவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.கண்ணை கறுப்பு துணியால் கட்டி, கையில் தட்டு ஏந்தி வரிசையாக நின்று, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தியால், பரபரப்பு ஏற்பட்டது.மேலும், எங்களை அனுப்ப விரைந்து ஏற்பாடு செய்யாவிட்டால், தினம், ஒரு போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X