பொது செய்தி

தமிழ்நாடு

ஓமன் நாட்டு சிறுவனுக்கு இதயத்தில் ஏற்பட்ட கோளாறுகளும் சரி செய்யப்பட்டன

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை: ஓமன் நாட்டைச் சேர்ந்த சிறுவன், 'டெட்ராலஜி ஆப் பேலோட்டு' என்ற பிறவி ஊனத்தால் பாதிக்கப்பட்டான். அவனது கல்லீரல், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டன.மேலும், நுரையீரல் ஒழுங்கற்ற நிலையில், இதய கோளாறு ஏற்பட்டது. எனவே, சிறுவன், வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தான். அங்குள்ள மருத்துவமனைகளில், சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், சென்னையில் உள்ள, எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு, இதய நிபுணர் டாக்டர் பாலகிருஷ்ணன், இதயம், நுரையீரல் துறை இணை இயக்குனர் சுரேஷ் ராவ் ஆகியோர் சிறுவனை பரிசோதித்தனர். அப்போது, சிறுவனின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததால், சீரான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அவன் அவதிப்பட்டு வந்தது தெரிய வந்தது.பின், அறுவை சிகிச்சை வாயிலாக, உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் இருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டன. இதயத்தில் ஏற்பட்ட கோளாறுகளும் சரி செய்யப்பட்டன.

இதுகுறித்து, டாக்டர் சுரேஷ் ராவ் கூறுகையில், ''சிறுவனின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஏற்பட்டிருந்த இதய, நுரையீரல் கோளாறு சரிசெய்யப்பட்டது.''ஒன்பது நாள் சிகிச்சைக்கு பின், சிறுவன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது, இயல்பு நிலைக்கு சிறுவன் திரும்பியுள்ளான்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X