பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணுாரில் தணிந்தது கடல் சீற்றம்; அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் குஷி

Added : மே 21, 2020
Share
Advertisement
 எண்ணுாரில் தணிந்தது கடல் சீற்றம்;  அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் குஷி

எண்ணுார்: புயல் கரையை கடந்த நிலையில், திருவொற்றியூர், எண்ணுாரில் கடல் சீற்றம் தணிந்தது. கடலில் பலவகை மீன்கள், அதிகளவில் சிக்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த, 'அம்பான்' புயல் காரணமாக, எண்ணுார், திருவொற்றியூர், காசிமேடு கடல் பகுதிகளில், மூன்று நாட்களாக, கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது.சில இடங்களில், தடுப்புக் கற்களை தாண்டி வீசிய அலையால், சாலை குப்பை கூளமாக மாறியது.மீன்பிடித் தடை காலத்தால், விசைபடகு உள்ளிட்ட பெரிய படகுகள், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தவிர, பைபர் படகுகள், கட்டுமரங்களில், குறிப்பிட்ட நாட்டிக்கல் மைல் துாரம் சென்று மீன்பிடித்தவர்களும், புயலால், படகுகளை கரைகளில் பத்திரப்படுத்தி விட்டு, கடலுக்கு செல்லவில்லை.புயல், வடகிழக்காக நகர்ந்து, மேற்கு வங்கம் அருகே, நேற்று முன்தினம் மாலை, கரையை கடந்த நிலையில், வடசென்னையில் கடல் சீற்றம் சற்றே தணிந்தது.

படகுகளை செலுத்த ஏதுவாக அலை வீசியதால், தாழங்குப்பம், சின்னகுப்பம், இந்திராகாந்தி குப்பம், பாரதியார் நகர் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த, சிறிய படகு மீனவர்கள், நேற்று காலை, கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.புயலுக்கு பின், நல்ல மீன் வரத்து இருக்கும் என்பர். அதுபோல, மீனவர்களின் வலையில், பாறை, சங்கரா, மத்தி, நண்டு உள்ளிட்ட மீன் வகைகள் அதிகளவில் சிக்கின. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீதமுள்ள மீனவர்கள், நேற்று அதிகாலை வரை, கடல் சீற்றம் இருந்ததால், கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். பின், சீற்றம் தணிந்ததை உணர்ந்து, இன்று முதல், கடலுக்கு செல்ல, வலை, படகுகளை தயார்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X