ரேஷன் கடை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

Added : மே 21, 2020
Share
தாம்பரம் : முறைகேடில் ஈடுபட்ட, ரேஷன் கடை ஊழியர்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை, செம்பாக்கம் அடுத்த திருமலை நகர், ரேஷன் கடையில், விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர், கோடீஸ்வரி. 38. இவர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், மளிகை பொருட்களை வாங்க, கட்டாயப்படுத்தி உள்ளார்.சிலரிடம், பொருட்கள் வரும் முன்பே, முன்தொகை பெற்று, வந்தபின் பொருட்களை குறைவாக கொடுத்து,

தாம்பரம் : முறைகேடில் ஈடுபட்ட, ரேஷன் கடை ஊழியர்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, செம்பாக்கம் அடுத்த திருமலை நகர், ரேஷன் கடையில், விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர், கோடீஸ்வரி. 38. இவர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், மளிகை பொருட்களை வாங்க, கட்டாயப்படுத்தி உள்ளார்.சிலரிடம், பொருட்கள் வரும் முன்பே, முன்தொகை பெற்று, வந்தபின் பொருட்களை குறைவாக கொடுத்து, தவறான கணக்கு காட்டியுள்ளார்.

மேலும், அரசின் கொரோனா நிவாரண நிதியான, 1,000 ரூபாயில், 300 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கவும் கட்டாயப்படுத்தி உள்ளார். அவ்வாறு, வாங்காதவர்களை ஒருமையில் பேசி உள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட, கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு, புகார்கள் சென்றன.அதிகாரிகள் ஆய்வில் முறைகேடு உறுதியானதால், கோடீஸ்வரி, கடந்த, 18ல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதேபோல், மாடம்பாக்கம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள, ரேஷன் கடையில் பணிபுரியும், தணிகாசலம் என்பவர், வெளி மார்க்கெட்டில் இருந்து பொருட்கள் வாங்கி, கூட்டுறவு துறையில் இருந்து, கொள்முதல் செய்த பொருட்களையும் சேர்த்து, விற்பனை செய்துள்ளார்.இதுவும், அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்ததால், அவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X