சென்னை: நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 20க்கும் மேற்பட்ட, ஆட்டோ தொழிலாளர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
வாகனங்கள் இயக்க அனுமதி, நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டங்கள் நடத்தினர்.இதேபோல், பிராட்வேயில் உள்ள, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள், நேற்று கலெக்டரை சந்திக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.பின், கோரிக்கை மனு அளித்து, கோஷங்கள் எழுப்பிவாறு கலைந்து சென்றனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:ஆட்டோ ஓட்டுனர்கள், ஒரு வேளை உணவுக்கே அல்லல்படும் நிலையில் உள்ளனர். அரசு அறிவித்த, நிவாரண தொகை பலருக்கு கிடைக்கவில்லை.ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களில், 10 சதவீதம் கூட நலவாரியத்தில உறுப்பினராக இல்லை. எனவே, முடிதிருத்துவோருக்கு வழங்கியது போல், நல வாரியத்தில் பதிவு செய்யாத, அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல், வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஓட்டுனர்களுக்கு, 15 ஆயிரம் நிவாரண தொகையும், சமூக இடைவெளியை பின்பற்றி ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE