சென்னை: சென்னையில், கொரோனா பாதித்த, 774 தெருக்களுக்கு மாநகராட்சி, 'சீல்' வைத்துள்ளது. தொடர்ந்து, 14 நாட்கள் தொற்று ஏற்படாத, 379 தெருக்களை, மாநகராட்சி விடுவித்துள்ளது.
சென்னையில், கொரோனா.ேபாதிப்பு கண்டறியப்படும் தெருக்களில் இருந்து, மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட வீடுகளை சுற்றியுள்ள ஐந்து வீடுகளுக்கு, மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்படுகிறது. ஐந்து நபர்களுக்கு மேல், ஒரு தெருவில் பாதிக்கப்பட்டால், அந்த தெரு முழுவதும், சீல் வைக்கப்படுகிறது.
அதன்படி, 774 தெருக்களுக்கு, மாநகராட்சி சீல் வைத்துள்ளது. மேலும், தன்னார்வலர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு, கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பாதிப்பு கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்ட பகுதிகளில், தொடர்ந்து, 14 நாட்கள் தொற்று கண்டறியப்படாத, 379 தெருக்களை, மாநகராட்சி விடுவித்துள்ளது. அதில், தண்டையார்பேட்டை மண்டலத்தில், 35 தெருக்கள்; ராயபுரம் மண்டலத்தில், 71 தெருக்கள், திரு.வி.க., நகர் மண்டலத்தில், 66 தெருக்களை மாநகராட்சி விடுவித்துள்ளது. அத்தெருக்கள், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிஉள்ளன.
கவலைக்குரிய 34!
சென்னையில், கோயம்பேடு மார்க்கெட் மூலம், 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புளியந்தோப்பு, 265 பேர், நெற்குன்றம் 224 பேர், பெரியமேடு, 186 பேர், ஜார்ஜ் டவுன், கிருஷ்ணாபேட்டை தலா, 155 பேர், ராயபுரம், 135 பேர், பழைய வண்ணாரப்பேட்டை, 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் கொரோனாவால், 8,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 4,000க்கும் மேற்பட்டோர், குறிப்பிட்ட, 34 வார்டுகளில் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வார்டுகளில் தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த, 34 வார்டுகளில் உள்ள மக்களுக்கு, இலவசமாக முக கவசம், ஜிங்க், வைட்டமின் - சி மாத்திரை மற்றும் கபசுர குடிநீர் என, நடமாடும் வாகனங்கள் வாயிலாக, தினமும், அதிகாலை என, 10 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE