கத்தாரில் ஒரே நாளில் புதிதாக 1,554 பேருக்கு கொரோனா

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தோஹா : கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து கத்தாரில் மேலும் 1,544 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்தாரிலும் நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ( ஒரே நாளில் ) புதிதாக 1,554 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,346 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒருவர் பலியானதை தொடர்ந்து, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. நோய் தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 688 பேர் குணமடைந்தனர். இதையொட்டி, கத்தாரில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,288 ஆக உள்ளது.


latest tamil news



கடந்த 24 மணிநேரத்தில் 5,045 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். இதனால் கத்தாரில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,482 ஆக அதிகரித்தது. நாட்டில் 3,315 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 171 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-மே-202004:18:12 IST Report Abuse
Loganathan Kuttuva Snall country is facing this much problem.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X