கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பீதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பீதி

Added : மே 21, 2020
Share

எண்ணுார் : எண்ணுாரில், கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறுவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எண்ணுார், அன்னை சிவகாமி நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் ஆசைதம்பி, 32; மின் ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, புழுக்கம் காரணமாக, கீழ் வீட்டை பூட்டி, குடும்பத்துடன் மாடியில் துாங்க சென்றார்.பின், நேற்று காலை, கீழே இறங்கி வந்து பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, 3 சவரன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது. எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல், நேற்று முன்தினம் எண்ணுார், நேரு நகரில் நடந்து வந்த, அம்மா உணவக பெண் ஊழியரிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த, மர்ம நபர்கள் இருவர், தங்க செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்த பெண், கீழே உட்கார்ந்து விட்டதால், செயின் தப்பியது. இரு தினங்களுக்கு முன், எர்ணாவூரிலும், வழிப்பறி சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X