ஆந்திரா அரசு ஊழியர்களுக்கு மே மாதத்தில் முழு சம்பளம்: முதல்வர்

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

அமராவதி: மாநில அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் முழுமையாக வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.



latest tamil news



ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன்ரெட்டி அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் முழுமையாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவது குறித்து விரரைவில் முடிவு செய்யப்படும்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மாநிலத்திற்கான வருவாய் குறைந்து விட்டது. இதன் காரணமாகவே சம்பளத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறினார்.


latest tamil news



இதனிடையே தலைமை செயலக ஊழியர் சங்க தலைவர் வெங்கட்ராமிரெட்டி கூறியதாவது: முதல்வர் மே மாதத்திற்கான முழு சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டார். அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பி உள்ளனர் அவர்கள் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடைபிடிக்கப்படுகிறது என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-மே-202006:03:41 IST Report Abuse
 Muruga Vel பணிக்கு வராமல் வீட்டிலேயே இருந்தவர்களுக்கு கேரளா மாதிரி ஒரு வாரம் சம்பளத்தை பிடித்தம் செய்திருக்கலாம்
Rate this:
Cancel
21-மே-202023:16:38 IST Report Abuse
நக்கல் திருப்பதி உண்டில கை வெக்காம பார்த்துக்கணும்... அப்பன் குளறுபடி செய்ய பார்த்தான், போய் சேர்ந்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X