பொது செய்தி

இந்தியா

1.70 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்

Added : மே 21, 2020
Share
Advertisement

புதுடில்லி : ''இன்று முதல், நாடு முழுதும், 1.70 லட்சம் பொது சேவை மையங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது,'' என, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால், மார்ச், 25 முதல் நிறுத்தப்பட்டிருந்த, பயணியர் ரயில் சேவை, ஜூன் 1 முதல் குறிப்பிட்ட மார்க்கங்களில் மீண்டும் துவங்க உள்ளன. முதற்கட்டமாக, 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' விரைவு ரயில் உள்ளிட்ட, 100 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. வலைதளத்தில், ரயில் பயணத்திற்கான முன்பதிவு, நேற்று துவங்கியது. இந்நிலையில், ''கணினி, இணைய வசதிகளற்ற பகுதிகளில் உள்ளோரும் பயன் பெறும் வகையில், இன்று முதல், நாடு முழுதும், 1.70 லட்சம் பொது சேவை மையங்களில், ரயில் பயண டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்யலாம்,'' என, பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது :சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய, இரண்டரை மணி நேரத்தில், நான்கு லட்சம் பேர் டிக்கெட் பதிவு செய்துஉள்ளனர்.அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில், முக்கிய ரயில் நிலையங்களிலும், பயண டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி செய்யப்படும். டிக்கெட் பதிவின் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பான, விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதுவரை, 2,050 சிறப்பு ரயில்கள் மூலம், 30 லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர்ந்தோர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

புலம் பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்புவதில், உ.பி., குஜராத் அரசுகள், ரயில்வேக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றன. ஆனால் மேற்கு வங்க அரசு, 27 ரயில்களுக்குத் தான் அனுமதி அளித்துள்ளது.அனைத்து மாநிலங்களும், புலம் பெயர்ந்தோரை திரும்ப அழைப்பதில், ரயில்வேக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தமிழகத்தில் எப்போது? தமிழக முதல்வர், இ.பி.எஸ்., மாநிலத்திற்கு, வரும், 31 வரை, ரயில்கள் விட வேண்டாம் என கேட்டுள்ளதால், இங்கே, அது வரையிலும் ரயில் சேவை இருக்காது என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X