பொது செய்தி

தமிழ்நாடு

அரசு செலவினங்களில் வருகிறது சிக்கனம்!

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
அரசு செலவினங்களில் வருகிறது சிக்கனம்!

சென்னை: கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க, அதிரடி நடவடிக்கையாக, அரசு செலவினங்களில்சிக்கனத்தை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
துறை வாரியாக ஒதுக்கப்பட்ட, செலவினங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதுடன், அதிகாரிகளின் பயணச்செலவுகளுக்கும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசு நிகழ்ச்சிகளில், விருந்து உபசாரங்களும், சால்வை, பூங்கொத்து சமாசாரங்களும், இனி கிடையாது என்றும்அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவல், அரசு கஜானாவை பெருமளவு பாதித்துள்ளது. தொழில்கள் அனைத்தும் முடங்கியதால், வருவாய் குறைந்துள்ளது.
நோய் பரவலை தடுக்கவும், பாதிப்புக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கவும், ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்தோருக்கு நிவாரண உதவி வழங்கவும், தமிழக அரசு பெரும் தொகை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை சமாளிக்க, செலவினங்களை குறைக்க, அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

* தினசரி செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 20 சதவீதம்; புதிய அலுவலகம் உருவாக்குதல் மற்றும் அலுவலக உட்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவில், 50 சதவீதம்; அரசு கண்காட்சிகள் நடத்த ஒதுக்கப்பட்ட நிதியில், 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* தமிழக அரசின் அலுவல் ரீதியான மதிய விருந்து, இரவு உணவு, மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 50 சதவீதம் குறைக்கப்படும்
.

* சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை தவிர, மற்ற துறைகளில், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் திட்டம், ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

* சுகாதாரம், காவல், தீயணைப்புத் துறை, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு போன்றவை தவிர, மற்ற துறைகளில், புதிய வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்படுகிறது. இதற்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில், 50 சதவீதம் குறைக்கப்படுகிறது
.

* கொரோனா நோய் பரவல் காரணமாக, வரும் மாதங்களில், அதிகம் பேர் கூட, தடை தொடரும். எனவே, அரசு ஊழியர்களுக்கான பயிற்சி; வெளிநாடுகளில் பயிற்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
.

* புதிய கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் வாங்க அனுமதி கிடையாது. பழையதை மாற்ற அனுமதி உண்டு. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 25 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளது
.

* அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட பகுதிக்குள், அவசிய தேவைக்கு மட்டும் பயணம் செய்ய வேண்டும். வழக்கமான ஆய்வுக் கூட்டங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' அல்லது 'டெலி கான்பரன்ஸ்' வழியாக மேற்கொள்ள வேண்டும்
.

* அரசு செலவில், வெளிநாடு செல்ல அனுமதி கிடையாது. மாநிலத்திற்குள், அலுவலக பயணமாக, விமானத்தில் செல்ல அனுமதி கிடையாது. ரயில் கட்டணத்துக்கு இணையாக அல்லது குறைவாக இருந்தால் செல்லலாம்.

* மத்திய அரசு நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க மட்டும், விமானத்தில் செல்ல அனுமதி உண்டு. அதிலும், உயர் வகுப்பு விமானப் பயணத்திற்கு, அனுமதி கிடையாது.

* அரசு ஊழியர்களின் தினப்படி செலவு, 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இடமாற்ற செலவினங்களை குறைப்பதற்காக, பொதுவான இடமாற்றம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
நிர்வாக காரணங்களுக்காக, சுய விருப்பம் காரணமான இடமாற்றம் மட்டும் அனுமதிக்கப்படும்
.

* அரசு விழாக்களில், சால்வை, பூங்கொத்து, நினைவுப் பரிசுகளை தவிர்க்க வேண்டும். அரசு நிகழ்ச்சி, கருத்தரங்கு, பயிலரங்கு போன்றவற்றில், அலுவலக ரீதியான மதிய உணவு, இரவு உணவு போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* இது, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பல்கலைகள் போன்ற வற்றுக்கும் பொருந்தும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.புதிய பணியிடங்களுக்கு தடைஅரசு செலவினத்தை குறைக்க, அனைத்து துறைகளிலும், புதிய பணியிடங்களை உருவாக்க, ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.துவக்க நிலையிலான பதவிகளில் ஏற்படும் காலியிடம், கருணை அடிப்படையில் பணி நியமனம் போன்றவற்றை, பணியாளர் குழு ஒப்புதல் பெற்று நிரப்பலாம். பதவி உயர்வால் ஏற்படும் காலியிடங்களை, ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி நிரப்பலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-மே-202023:04:38 IST Report Abuse
Rajagopal அரசாங்க ஊழியர்கள் வாங்கும் லஞ்சத்தைக் குறைத்தாலே வளம் பெருகும்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
22-மே-202021:52:51 IST Report Abuse
m.viswanathan இதை இப்படியே நடைமுறை படுத்தினால் இந்தியா வல்லரசு ஆகிவிடும் . சொந்த மக்களை , நாட்டை சுரண்டும் நிலை மாற வேண்டும்
Rate this:
Cancel
Kutti Ravi - coimbatore,இந்தியா
22-மே-202018:42:05 IST Report Abuse
Kutti Ravi வீடியோ காலிங் முறையில் இனிமேல் மீட்டிங் நடத்தலாம். லஞ்சம் வாங்க முடியவில்லை என்றால் கொடிக்காசு கேட்டு புடுங்குகிறார்கள் ரசீது கொடுக்க மாட்டார்கள். அது என்ன ரூல்ஸ் என்று தெரியவில்லை. .ஆனா ஒன்று லஞ்சம் கேக்கும்போது நல்ல நெளியுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X