பொது செய்தி

தமிழ்நாடு

உலக அமைதிக்கான, 'மைத்ரீம் பஜத' 47 இசை கலைஞர்கள் கைகோர்ப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : உலக அமைதிக்கான, 'மைத்ரீம் பஜத' என்ற பாடல், தற்போது, 47 கர்நாடக இசை கலைஞர்களால் பாடப்பட்டு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலக அமைதிக்காக, மகா பெரியவர் எழுதி, கர்நாடக இசைக்குயில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஐ.நா., சபை பொன்விழா மேடையில் பாடிய பாடல் தான், 'மைத்ரீம் பஜத!' இந்த சமஸ்கிருத பாடல், 1966ல் பாடப்பட்டாலும், கர்நாடக இசை கலைஞர்களின் விருப்பப் பாடலாக இன்றளவும் உள்ளது. தற்போது, கொரோனா தொற்றால், உலகம் அமைதியின்றி இருக்கும் இந்தச் சூழலில், 47 கர்நாடக இசை கலைஞர்கள் இணைந்து, இந்த பாடலை பாடியுள்ளனர். அவர்கள் பாடியது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஐந்து நிமிடம் ஓடக்கூடிய, இந்தப் பாடல், அவரவர் வீட்டிலிருந்தபடியே ஒன்றிரண்டு வரிகள் பாடி அனுப்பி, அழகிய இசை மாலையாக கோர்க்கப்பட்டுள்ளது. இதற்கான யோசனையையும், முயற்சியையும், பாடகர் மஹதியும், சுதா ரகுநாதனும் தொடங்கினர். இவர்களுடன், எம்பார் கண்ணன் வயலின் இசைக்க, ஆனந்த் பத்மநாபன் மிருதங்கம் வாசிக்க, சவுமியா, காயத்ரி வெங்கட்ராகவன், ஓ.எஸ்.அருண், சிக்கில் குருசரண், மல்லாடி சகோதரர்கள் உள்ளிட்ட பாடகர்கள் இணைந்து, உற்சாகமாக பாடியுள்ளனர்.

பாடல் கோர்ப்பை, ஆதித்யா ஸ்ரீனிவாசன் செய்துள்ளார்.இது குறித்து, பாடகர், ஓ.எஸ்.அருண் கூறுகையில், ''உலகம் தற்போதுள்ள சூழலில், சுதா ரகுநாதன் எடுத்த முயற்சி மிகவும் பொருத்தமானது. கர்நாடக இசைக் கலைஞர்கள் இணைந்து, உலக அமைதிக்கான பாடலை பாட, வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X