பொது செய்தி

தமிழ்நாடு

கூலி தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால சம்பளம் ; அரசுக்கு சிவகாமி கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement

சென்னை : 'கூலி தொழிலில் ஈடுபட்டு வரும் அடித்தட்டு மக்களுக்கு, ஊரடங்கு காலமான, 60 நாட்களும் வேலை செய்ததாக கருதி, சம்பளம் வழங்க வேண்டும்' என, சமூக சமத்துவ படை கட்சி மற்றும் இந்திய பெண் சிந்தனையாளர் களம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, சிவகாமி அறிக்கை: இரு மாத ஊரடங்கால், பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை, என்ன என்பதை ஆய்வு செய்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், வருமானம் மற்றும் பாதுகாப்பிற்கும் வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.முதல் கட்டமாக, கிராம, நகரங்களில் கூலி தொழிலில் ஈடுபட்டு வரும் அடித்தட்டு மக்கள் மற்றும் பெண்கள் அனைவரும், 60 நாட்களும் வேலை செய்ததாக கருதி, சம்பளம் வழங்க வேண்டும்.

சலவை மற்றும் சவரத் தொழில், ஆட்டோ டிரைவர்கள் குடும்பங்களுக்கும், குறைந்தபட்சம், இரு மாதங்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வங்கிகள் வாயிலாக, வட்டியில்லா கடன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.நடைப்பாதை வியாபாரிகள், சுமை துாக்குவோர், சிறு டீக்கடை, வண்டியில் சிற்றுண்டி விற்கும் வியாபாரிகள் ஆகியோருக்கு இழப்பீடும், வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள திட்டங்களில், குறு, சிறு தொழில் செய்பவருக்கு, வட்டியில்லா கடன் பற்றி, அறிவிப்பு இல்லை. அவர்களுக்கு, வட்டியில்லா கடன் வழங்கி, தொழில் மேம்படவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும், அரசு உதவி செய்ய வேண்டும்.

நகராட்சிகளில் தேர்தல் நடக்காததால், அதிகாரிகளை மட்டும் நம்பி இருக்காமல், ஓய்வுபெற்ற அதிகாரிகள், தன்னார்வலர்கள் இணைந்த அமைப்பை உருவாக்கி, நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். ஏழை மக்களுக்கு, இலவசமாக முக கவசங்களும், தரமான கிருமி நாசினிகளும் வழங்க வேண்டும். குறைந்த விலையில், ஊட்டச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுகள் கிடைக்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். போலீசார், ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததை சாதகமாக்கி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தொடர்ந்து வன்முறையை ஏவி வந்துள்ளனர்.

அவர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அதன் விபரங்களை, ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X