காஷ்மீரில் போலீஸ்காரர் பலி| Dinamalar

காஷ்மீரில் போலீஸ்காரர் பலி

Added : மே 21, 2020
Share

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், போலீஸ்காரர் ஒருவர் இறந்தார்; ஒருவர் காயம் அடைந்தார்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், ஜம்மு - காஷ்மீர் போலீசாரும் இணைந்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருத்தனர். அப்போது, பெர்ச்சூ பாலம் அருகே மறைந்திருந்த பயங்கரவாதிகள், போலீசார் மீது, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், போலீசார், அனுஜ் சிங் மற்றும் முகமது இப்ராகிம் படுகாயம் அடைந்து, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அனுஜ் சிங் இறந்தார். பயங்கரவாதிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் தலைநகர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான சவுராவில், பேக்கரி கடை ஒன்றில், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் இருவர், நேற்று முன்தினம் மாலை, பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள், பேக்கரி கடையை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர். இதில், வீரர்கள் இருவரும் குண்டு பாய்ந்து, அதே இடத்தில் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு, லஷ்கர் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X