பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தி செய்த வெல்லம் தேக்கம்:கூடுதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement
 உற்பத்தி செய்த வெல்லம் தேக்கம்:கூடுதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை

மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில், ஆண்டுதோறும், 6,000 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி நடக்கிறது. இதில், குறிப்பிட்ட அளவு வெல்லம் உற்பத்திக்கு பயன்படுகிறது.வேடபட்டி, சாமராயபட்டி, பாப்பான்குளம், முள்ளங்கிவலசு, தாமரைப்பாடி, காரத் தொழுவு உள்ளிட்ட பல கிராமங்களில், ஆலை சாளைகள் அமைத்து வெல்லம் காய்ச்சும் தொழில் பாரம்பரியமாக நடக்கிறது.விளைநிலங்களில் இருந்து, கரும்பு பாரம் ஏற்றி எடுத்து வருகின்றனர். பின், கரும்புகளை இயந்திரங்கள் மூலம் பிழிந்து சாறெடுத்து, பெரிய அடுப்பின் மீது உள்ள கொப்பரைகளில் ஊற்றி சூடாக்குகின்றனர்.மூன்று மணி நேரம் வரை கொதிக்க வைக்கப்படும் கரும்புச்சாறு, கெட்டியாகி பாகுவாக மாறுகிறது.குறிப்பிட்ட பக்குவம் அடைந்த பாகுவை, மர பாத்திரங்களில் கொட்டி அதிலிருந்து தேவையான அளவு எடுத்து, மர அச்சுகளில் ஊற்றப்படுகிறது. இது சிறிது நேரத்தில் வெல்லமாகிறது. இதை, 'அச்சு வெல்லம்' என, அழைக்கின்றனர்.பாகுவை உருண்டையாக்கினால், 'உருண்டை வெல்லம்' என, குறிப்பிடுகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், உற்பத்தியாகும் வெல்லம் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'கோடைகாலத்தில் கிராமங்களில் திருவிழா நடக்கும். இதற்கு பலகாரம் செய்யவும், பொங்கல் வைத்து நெய்வேத்தியம் படைக்கவும், அபிஷேகம் செய்வதற்கும், அதிக அளவில் வெல்லம் பயன்படும். இது தவிர, அருகிலுள்ள மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, எந்த நிகழ்ச்சிகளும் நடக்காத நிலையில், வெல்லத்துக்கான தேவையும் குறைந்துள்ளது.அருகிலுள்ள மாநிலங்களுக்கும் அனுப்ப முடியவில்லை. இதனால், பல டன்கள் வெல்லம் தேக்கம் அடைந்துள்ளது. அரசு கூடுதல் விலை நிர்ணயம் செய்து, விற்பனைக்கும் அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X