பொது செய்தி

தமிழ்நாடு

வீதிகளில் கிருமிநாசினி பவுடரை நீரில் கலந்து தெளிக்க கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை நகர வீதிகளில், கிருமி நாசினி பவுடரை, நீரில் கலந்து தெளிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை நகரப்பகுதிகளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குடியிருப்புகள் முழுவதும், சுழற்சி முறையில் தொடர்ந்து துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நகர வீதிகளில், கிருமி நாசினி பவுடர் அவ்வப்போது போடப்பட்டு வருகிறது. ஊரடங்கிற்கு தளர்வுகள் வழங்கப்படாதபோது, வாகனங்கள் போக்குவரத்து குறைந்திருந்தது.தற்போது, ரோடுகளில் வாகனபோக்குவரத்து அதிகரித்துள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியில் காற்றும் பலமாக வீச துவங்கியுள்ளது. வீதிகளில் போடப்பட்டுள்ள கிருமிநாசினி பவுடர், வாகன போக்குவரத்தால், காற்றில் அதிகம் பறப்பதால், பொதுமக்கள் பலரும் சுவாச கோளாறுகளால் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இதனால், கிருமி நாசினியை, நீரில் கலந்து தெளிக்க, நகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X