பொது செய்தி

தமிழ்நாடு

கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடி உதவி கைத்தறி மற்றும் துணிநுால் இயக்குநர் அலுவலகத்தின் கீழ் 80க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் இயங்குகின்றன. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள்உறுப்பினர்களாக இருந்து வீடுகளில் தறி மேடை அமைத்து தொழில் செய்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் கச்சாப்பொருட்கள் கிடைக்காமல் தொழில் இன்றி தவிக்கின்றனர்.இதையடுத்து அனைத்து கூட்டுறவு சங்கங்களும் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை நெசவாளர்களுக்கு சிறப்பு முன்பணம் வழங்க கைத்தறி துணி நுால் இயக்குநர், சங்க மேலாண்மை இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி சங்கங்கள் மட்டும் உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கியுள்ளனர். மற்ற சங்கங்கள்காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் நெசவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X