வெள்ளை ஈ மேலாண்மை திட்டம் :விவசாயிகள் பயன்பெற அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளை ஈ மேலாண்மை திட்டம் :விவசாயிகள் பயன்பெற அழைப்பு

Added : மே 21, 2020
Share

ஆனைமலை:தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, அரசு வெள்ளை ஈ மேலாண்மை திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, 800 ரூபாய்க்கு மஞ்சள் ஒட்டுப்பொறி, 300 ரூபாய்க்கு 'கிரைசோபெர்லா' இரைவிழுங்கிகள் முட்டைகள், தென்னை மரத்தின் ஓலையில் வேகமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்துக்கு, ஆயிரம் ரூபாய் என, எக்டருக்கு, 2,100 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக ரமணமுதலிபுதுார் பகுதியில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி தலைமை வகித்தார். கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் நாகபசுபதி, வேளாண் அலுவலர் ஸ்ரீமதி உடனிருந்தனர். விவசாயிகளின் தோட்டங்களில், திட்டம் மூலம் எவ்வாறு வெள்ளை ஈ கட்டுப்படுத்தப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது.இயந்திரம் மூலம் தென்னை ஓலையில் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, ஓலையில் 'கிரைசோபெர்லா' இரைவிழுங்கிகள் முட்டைகள் வைப்பது, மஞ்சள் ஒட்டுப்பொறி வைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X